சிவகார்த்திகேயன் நடித்துவரும் படத்திற்கும், விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்திற்கும் "ஹீரோ' என்கிற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சரிவர பரிசீலிக்காமல் இரண்டு தரப்பிற்குமே "ஹீரோ' டைட்டிலை அனுமதித்திருந்தது. இருதரப்பும் டைட்டிலை விட்டுத்தர மறுத்து மல்லுக்கட்டி வந்த நிலையில்...

""ஸ்கிரிப்ட்டில் முக்கியமான மாற்றங்களைச் செய்யச் சொல்லிவிட்டார் விஜய் தேவரகொண்டா. இதனால் இந்தப் படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனால் சிவகார்த்திகேயனின் "ஹீரோ' பட டைட்டிலுக்கு ஏற்பட்டிருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.

ttt

Advertisment

"தொடர்ந்து நஷ்டம் ஏற்படுவதால் புதிய படங்களுக்கு பூஜை போடுவதை நிறுத்திவிட்டு... ஹீரோ-ஹீரோயின் மற்றும் டைரக்டர் உட்பட முக்கிய கலைஞர்களின் சம்பளத்தை குறைப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும்' என விநியோகஸ்தர்கள் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.

இந்த சம்பளப் பிரச்சினைக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்க துணைத்தலைவராக பதவியேற்றிருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு யோசனையைச் சொல்லியுள்ளார்.

""நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை "லாபத்தில் பங்கு' என்கிற அடிப்படையில் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யவேண்டும். இதற்கு ஒப்புக்கொள்கிற நட்சத்திரங்களை வைத்துப் படம் தயாரிக்க வேண்டும். "படம் ஓடினால்தான் நமக்கு சம்பளம் வரும்' என்கிற அக்கறையில் எல்லோருமே கடுமையாக உழைப்பார்கள்'' என்பதுதான் ரவிக்குமார் சொல்லியிருக்கும் யோசனை.

டிகர் சங்க தேர்தலை நடத்த சங்கங்களின் பதிவாளர் தடை செய்ததை எதிர்த்து நடிகர் சங்க செயலாளர் விஷால் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். விஷாலை எதிர்த்து போட்டியிட்ட ஐசரிகணேஷ், தனது நண்பர் அனந்தராமன் என்பவர் மூலம்... "இந்த வழக்கை தாமதப்படுத்தும்படி' நீதிபதியிடம் முயற்சி மேற்கொண்டார். இதில் அதிருப்தியான நீதிபதி... இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய உத்தரவிட்டார். இந்த அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அமர்வு விசாரித்தது. நேரில் ஆஜரான ஐசரிகணேஷும், அனந்தராமனும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதுடன்... சட்டப்பணிகள் ஆணையத்துக்கு பத்து லட்ச ரூபாய் வழங்குவதாக ஐசரிகணேஷ் தெரிவித்தார்.

இதை ஏற்று அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டிருக்கிறது.

மயமலைக்குச் சென்று வந்ததிலிருந்து அமலாபால், "எளிமையே வலிமை'னு வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

டெல்லியில் வசித்துவந்த அமலா, பாண்டிச்சேரிக்கு குடிபுகுந்தார். கடந்த வருடம், தான் வாங்கியிருந்த உயர் ரக காரையும் விற்றுவிட்டார். இருபதாயிரம் ரூபாய்க்குள் ஒரு மாதத்திற்கான செலவை முடித்துக்கொள்கிறாராம்.

-ஆர்.டி.எ(க்)ஸ்